Connect with us

News

ஸ்கிரிப்ட் வேலைகள் பினிஷ்…அடுத்த சம்பவத்திற்கு தயாரான எச்.வினோத்.!

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணிகளை முடித்துள்ளார். அதன்படி, அவர் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து தான் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதுவரை இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது  முடித்துவிட்டார்.

kamal haasan h vinoth

kamal haasan h vinoth [Image Source: Twitter]

இந்த ஸ்கிரிப்ட்டை நடிகர் கமல்ஹாசன்  படிக்கும் வகையில் கட்டுப்பாடான ஸ்கிரிப்ட் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு (RKFI) க்கு வழங்கப்பட்டது. தற்போது இந்தியன்2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கமல் இந்த படத்திற்கான தேதிகளை ஜூன்’23 முதல் ஒதுக்குவார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்- எனக்கும் காதல் தோல்வி தான்…கதறி அழுத நடிகை ஆத்மிகா.!

kamal haasan h vinoth JOIN new flim

kamal haasan h vinoth JOIN new flim [Image Source: Twitter]

இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த பிறகு எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கஉள்ள படத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.

kamal haasan and H. Vinoth

kamal haasan and H. Vinoth [Image Source: Twitter]

மேலும், சமீபத்தில் எச்,வினோத் கூறிய அந்த கதை கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்துப்போக கமல்ஹாசன் விலை உயர்ந்த ஒரு கார் ஒன்றை எச் வினோத்திற்கு வாங்கி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.  எனவே இவர்கள் இருவரும் இணையும் படத்தின் கதை அந்த அளவிற்கு அருமையாக இருக்கும் என இதன் மூலம் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top