News
இரண்டு ஹீரோயின்களுக்கு தூண்டில் போட்டுள்ள செல்வராகவன்! சிக்குனா சின்னாபின்னம் தான்!
செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 7ஜி ரேம்போ காலனி. இந்த படம் எந்த அளவிற்கு இப்போது காலத்தால் அழியாத ஒரு படமாக இருக்கிறது என்பது படம் பார்த்துவிட்டு அதனுடைய தாக்கம் புரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார்.

7GRainbowColony 2 [Image Source : File Image ]
படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகத்திற்கான கதை எழுதும் பணியை இயக்குனர் செல்வராகவன் தொடங்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகத்திலும் ரவி கிருஷ்ணன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், படத்தில் ரவிகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க இரண்டு இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
அவர்கள் யார் என்றால் ஒன்று சங்கரின் மகள் அதிதி சங்கர் மற்றொரு நடிகை லவ் டுடே திரைப்படத்தில் நடித்த இவானா இவர்கள் இருவரிடம் தான் 7 ஜி ரெம்போ காலனி படத்தில் ஹீரோயினாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்தில் யார் நடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துபார்ப்போம். முதல் பாகத்திலே நெருக்கமான காட்சிகளாக அமைந்தது எனவே இந்த இரண்டாவது பாகத்திலும் அதே போன்று காட்சிகள் இருக்கும் என்பதால் இந்த இரண்டாவது பாகத்தில் நடிக்க எந்த ஹீரோயின் நடிக்க ஒப்புக்கொள்கிறார்களோ அவர்கள் அந்த காட்சியிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார்கள் என கூறப்படுகிறது.
