News
சூப்பர் ஸ்டார் மகளின் நகை திருட்டு வழக்கு.! வேலைக்காரப் பெண் கைது…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டின் லாக்கரில் வைத்திருந்த விலை உயர்ந்த நகைகள் மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவுக்கு சென்னையில் பல வீடுகள் உள்ளது.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உதவியாளராக பணியாற்றி வந்த ஈஸ்வரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆம்… கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், அடிக்கடி பெரிய தொகை கொண்ட பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது. விசாரணைக்காக தம்பதியர் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது, 2019 முதல் 60 சவரன் நகைகளை சிறிது சிறிதாக திருடி பணமாக மாற்றியதை அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்களேன் – பொன்னியின் செல்வன் 2 பின்னணி இசை பனி தீவிரம்.! ஏ.ஆர்.ரஹ்மான் சம்பவம் லோடிங்.!
ஐஸ்வர்யா தனது புகாரில், கடைசியாக 2019 ஆம் ஆண்டு தனது சகோதரி சௌந்தர்யாவின் திருமணத்திற்காக நகைகளை அணிந்ததாகவும், அதன் பிறகு லாக்கரை திறக்கவே இல்லை என்றும் கூறியிருந்தார். சாவிகள் அவரது செயின்ட் மேரிஸ் ரோடு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், லாக்கரே தனுஷுடன் வசித்து வந்தபோது மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டிற்கு மாற்றப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு, லாக்கர் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு மாற்றப்பட்டது. இப்படி, பலத்த பாதுகாப்புடன் இருந்தும் வீட்டு வேலைக்கார பெண் துணிச்சலாக திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
