Connect with us
siruthai siva and suriya

News

திருந்தாத சிறுத்தை சிவா! தலையில் அடித்துக்கொள்ளும் சூர்யா ரசிகர்கள்.!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் முன்னோட்ட காட்சியும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

Kanguva

Kanguva [Image Source : Twitter /@iammoviebuff007]

வழக்கமாக சிறுத்தை சிவா இயக்கும் படங்கள் ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும். ஆனால், கங்குவா படத்தின் அறிவிப்பு வந்தவுடனே இது அவருடைய சினிமா கேரியரில் மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என பலரும் நினைத்தனர். ஆனால், கங்குவா திரைப்படம் பாகுபலி போன்ற ஒரு படம் கிடையாதாம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்தை போல ஒரு கதையாம்.

இந்த தகவலை பிரபல தயாரிப்பாளரான தனஜெயன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர் ”  கங்குவா திரைப்படம் முழுவதுமே வரலாற்று கதையை கொண்டது இல்ல. அது படத்தில் வரும் ஒரு சில பார்ட் மற்றும் தான். மற்றபடி, படத்தில் மற்ற படங்களை போல சூர்யா சாதாரணமாக வருவார். திஷா பதானி வருவார்.

Kanguva

Kanguva [Image Source : Twitter /@iammoviebuff007]

ரசிகர்களுக்கு பிடித்தது போல ஜாலியான ஒரு என்டர்டெய்மென்ட் இருக்கிறது” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சற்று கடுப்பாகி சிவா இன்னும் திருந்தவே இல்லை என கூறி வருகிறார்கள். ஏனென்றால், இதற்கு முன்பு கடைசியாக சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெறவில்லை எனவே, இந்த படமும் வழக்கம் போல அவர் ஒரு சாதாரண கதையை இயக்ககூடாது.

அப்படி இயக்கினால் இந்த கங்குவா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்காமல் போய்விடும் என்பதால் சூர்யா ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், தனஜெயன் கூறியதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வேலை சிறுத்தை சிவா சீமராஜா 2 எடுக்காரா.? என கலாய்த்து வருகிறார்கள்.

Continue Reading
To Top