News
நடிகர் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.!
நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜின் இயக்கும் “கொட்டுக்காளி” திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், இன்று நிறைவடைந்து உள்ளது.
சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பார்வை வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பார்வை வீடியோவில் சேவலை முக்யமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த வீடியோவில் நடிகர் சூரி சிகரெட் புகைக்கும் காட்சியும் இடம்பெற்று இருந்தது.
இதனை வைத்து பார்க்கும்பொழுது, அந்த சேவலை வைத்து படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும் போல் தெரிகிறது.
We’ve wrapped up filming for our #Kottukkaali! Now, it’s full speed ahead with post-production to bring you an unforgettable cinematic experience.#KottukkaaliWrapUp@Siva_Kartikeyan @KalaiArasu @sooriofficial @PsVinothraj @benanna_love @sakthidreamer @thecutsmaker… pic.twitter.com/RVo4KflQqC
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 22, 2023
