காதலனுடன் அந்த மாதிரி இருக்கும் போட்டோவை கசிய விட்ட ஸ்ருதி ஹாசன்.! திகைப்பில் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல், தனது காதலரான சாந்தனு ஹசாரிகாவுடனான லிவ்-இன் உறவைப் பற்றியும் அப்டேட் செய்து வருகிறார்.
அட ஆமாங்க… ஸ்ருதிஹாசன் தற்போது வரைபட கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். முன்பெல்லாம் ரகசியமாக இருந்த இவர்களது காதல், தற்போது பெருமளவில் சமூக வலைதளப் பக்கங்களில் பேச்சு பொருளாகி மாறிருக்கிறது.
தற்போது, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தனது காதலனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ‘எனக்கு எல்லாம் வேண்டும்’ என்ற வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிங்கர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை, வெளி ஊர்களுக்கு செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார், அவர் ஸ்ருதிஹாசன் மேலே, அவரது காதலன் இருப்பது ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்களேன் – என்னாது…! நடிகை அதிதி பாலன் கால்பந்து வீராங்கனையா? வைரலாகும் புகைப்படங்கள்…
இதற்கிடையில், ஒரு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு, திருமணத்தைப் பற்றி சிந்திப்பதை விட புதிதாக ஏதாவது ஒன்றை உருவாக்குதில் தான் நேரத்தை செலவிடுகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
