Celebrities
“மால டும் டும், மஞ்சர டும் டும்” திருமண மணியை அடித்த சித்தார்த் – அதிதி…
சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் தற்போது, விஷால் நடித்த ‘எனிமி ‘ படத்தில் இடம்பெற்றிருக்கும் வைரல் பாடலான ‘மால டம் டம்’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர், அந்த பாடலுக்கு நடனமாடும் அழகான வீடியோவை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இப்போ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
View this post on Instagram
அதாவது, இயக்குனர் அஜய் பூபதி இயக்கிய ‘மகா சமுத்திரம்’ படத்தில் ஜோடியாக நடித்த சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக சில வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால், இவர்கள் இருவரும் தங்கள் உறவைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் அடிக்கடி ஒரு சில பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதையும் படிங்களேன் – பருத்திவீரன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?
இந்நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இந்த ரீல் வீடியோ ஒரு அறிகுறியாக தெரிகிறது. இந்த வீடியோ பார்த்த பலரும் ஒரு வேளை திருமணம் செய்ய போவது உறுதியோ என்று கேள்வியையும் கமெண்ட்ஸையும் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த ஜோடி சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் மதிய உணவிற்காக ஒன்றாக வருகை தந்தனர். மேலும், சில வாரங்களுக்கு முன்பு, இந்த ஜோடி ஹைதராபாத்தில் நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்தத்தில் ஒன்றாக கலந்துகொண்டனர்.
