News
#Atman: சும்மா மாஸ் லுக்கில் கலக்கும் சிலம்பரசன்.! புதுப்பட கெட்டப்பா?
நடிகர் சிம்பு தனது ‘பத்து தல’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தாய்லாந்து சென்றார். உலகநாயகன் கமல் தயாரிப்பில் இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் இணைந்துள்ள தனது அடுத்த படத்துக்காக தற்காப்புக் கலைப் பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டு, உடல் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்டிஆர் 48’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் நடக்கவுள்ள ‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னை திரும்பினார் நடிகர் சிம்பு.
அந்த வகையில், சிம்பவின் தனது புதிய தோற்றத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அவர், நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் வருகை தந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்களேன் – Miss You: கேக் வெட்டி சந்திரமுகியை வழி அனுப்பிவைத்த படக்குழு.!
மேலும் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில், சிம்பு தனது உடற்பயிற்சி வீடியோவை #Atman என்ற கேஸ்டெகில் விரைவில் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபேலி என் கிருஷ்ணா இயக்கிய, பத்து தல படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
