News
பொன்னியின் செல்வன் -2 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிம்பு!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்- 2 படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை கமல்ஹாசன் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக, கமல்ஹாசனுடன் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படம் நாளை வெளியாகவுள்ளது, இதனால் அவரது படத்துக்கு ப்ரோமஷனாக இருக்குமென்று, ‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
Related
