News
போர்வீரனாக களமிறங்கும் சிம்பு…ஜோடியாக நடிக்க 3 ஹீரோயின்கள்.! ‘STR48’ லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!
சிம்புவின் 48-வது திரைப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராக் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ளது. படத்திற்காக நடிகர் சிம்பு நீளமான தலைமுடியுடன் இருக்கிறார்.

STR48 update [Image Source : instagram]
அவருடைய கெட்டப்பை பார்க்கையிலே STR 48 திரைப்படம் எந்த அளவிற்கு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளது என தெரிகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் சில அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.

STR48 [Image Source : instagram]
அந்த வகையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், STR 48-திரைப்படத்தில் சிம்பு ஒரு கிராண்ட் ஃப்ளாஷ்பேக் போர்ஷனில் ஒரு போர்வீரனாக நடிக்கிறாராம். அந்த காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்-மும்பைக்கு வெறும் 500 ரூபாயுடன் வந்தேன்…நடிகை கங்கனா ரனாவத்.!

STR48 update [Image Source : instagram]
அது மட்டுமின்றி, இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக திஷா பதானி, பூஜா ஹெக்டே & ரஷ்மிகா மந்தனா போன்ற ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கிடையில், சிம்பு நடித்து முடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related
