Connect with us

News

பத்து தல படத்தை பார்த்து மிரண்டு போன சிம்பு.! முதல் விமர்சனம் இதோ.!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில்  சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

#PathuThala

#PathuThala [Image Source : Google]

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கான டிக்கெட் முன் பதிவும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிம்பு பத்து தல படத்தை பார்த்து மிரண்டு போனதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

PathuThala Postponed to 2023

PathuThala Postponed to 2023 [Image Source: Twitter]

படத்தை பார்த்துவிட்டு மிரண்டு போய் படம் மிகவும் அருமையாக இருப்பதாக படக்குழுவிடம் கூறியுள்ளாராம். அதைப்போல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Pathu Thala Str

Pathu Thala Str [Image Source: Twitter]

எனவே சிம்புவே படத்தை பார்த்து மிரண்டு போய்விட்டார் என்றால் கண்டிப்பாக படம் அந்த அளவிற்கு பேசப்படும் ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 48-வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top