News
#STR48: லண்டனுக்கு சென்ற சிம்பு…விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு.!
நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் கைகோர்த்து தனது அடுத்த படத்திற்கு தயாராவதற்காக லண்டன் புறப்பட்டார். ஒரு பீரியடிக் ஆக்ஷன் படம் என்று கூறப்படும், தேசிங் பெரியசாமியுடன் சிலம்பரசன் நடிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘STR 48″ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் இதுவரை கண்டிராத அவதாரத்தில் போர்வீரனாகக் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, சில நாட்களுக்கு முன், நடிகர் சிம்பு லண்டன் சென்று அதிரடி காட்சிகளுக்காக சில பயிற்சிகளை மேற்கொள்ள சென்று திரும்பி வந்த நிலையில், மீண்டும் சில வாரங்களுக்கு லண்டனில் சிறப்பு பயிற்சி எடுக்கவுள்ளார்.
மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் அறிவிக்கப்படவில்லை, மேலும் படத்தின் படப்பிடிப்பு முஹுரத் பூஜையுடன் தொடங்கும் போது படக்குழு அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
