Movies
பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் பல முறை…ரசிகர்கள் ரசித்த காலம்.!
90 காலகட்டங்களில் திரைத்துறையில் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட ஜோடிகளில் பிரஷாந்தும் சிம்ரனும் ஒரு பகுதியாக இருந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தது மட்டுமின்றி, அவர்களின் அட்டகாசமான காதல் கெமிஸ்ட்ரி ரசிகர்களை ஈர்க்க செய்தது. அப்புடி அவர்கள் இருவரும் கடந்து வந்த படங்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
கண்ணெதிரே தோன்றினாள்:
ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998-ம் ஆண்டு வெளியான இந்த காதல் திரைப்படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் முதல் முறையாக இணைந்தனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பணக்கார தொழிலதிபரின் மகனாக பிரஷாந்த் தனது சிறந்த நண்பனான நடிகர் கரண் சகோதரி நடித்த சிம்ரன் காதலிக்கிறார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
ஜோடி:
கண்ணெதிரே தொண்டினால் வெளியான அடுத்த ஆண்டேபிரவீன் காந்தி இயக்கிய மற்றொரு காதல் திரைப்படம் இருவருக்கும் அமைந்தது. இருவரும் தங்கள் திருமணத்திற்கு அனுமதி பெற ஒருவருக்கொருவர் குடும்பங்களுக்குச் செல்லும் காதல் ஜோடியாக நடித்தனர்.
பார்த்தேன் ரசித்தேன்:
சரண் இயக்கத்தில் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் பிரசாந்த், சிம்ரன் மற்றும் லைலாவும் உடன் நடித்திருந்தார். இந்த முக்கோணக் காதலில், சிம்ரன் தனது கேரியரில் முதல்முறையாக வில்லியாக நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. மேலும், இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது மட்டும்மில்லாமல் சூப்பர் ஹிட் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்
இந்த திரைப்படம் இவர்கள் இருவரும் இதற்கு முன்னதாக நடித்த படங்கள் போல் இல்லாமல், அனைத்து ரொமாண்டிக் அல்டிமேட்டாக இருந்தது. தமிழ் ஒரு அதிரடி பொழுதுபோக்கு, இது ஹரியின் இயக்குனராக அறிமுகமான படமாகும். இப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கேரக்டருக்காக பிரசாந்த் தனது உடலை மெருகேற்றி, தாடி வளர்த்துள்ளார்.
அந்தகன்
பிரசாந்த் மற்றும் சிம்ரன்அகல்யா இருவரும் 20 ஆண்டுகள் கழித்து, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்துக்காக மீண்டும் இணைந்தனர். ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் பிரசாந்த் நடிக்க, தபு நடித்த வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். தியாகராஜன் இயக்கும் இத்திரைப்படத்தின் கதை, ஒரு பார்வையற்ற பியானோ கலைஞரைச் சுற்றி ஒரு கொலை கதையாகும். படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.
