Connect with us
Mysskin about sivakarthikeyan movie

News

மிஷ்கினிடம் வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்…வேண்டாம் என கெஞ்சும் ரசிகர்கள்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் ரிலீஸ் ஆகா தயாராகவுள்ளது. இந்த படம் வரும் ஜூலை 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்.

Mysskin and sk

Mysskin and sk [Image Source : File Image ]

படத்தின் டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மிஷ்கினிடம் தனக்கு ஒரு கதை தயார் செய்ய சொல்லி  கூறியுள்ளாராம்.

Mysskin about sivakarthikeyan

Mysskin about sivakarthikeyan [Image Source : File Image ]

இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குன மிஷ்கினே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மிஷ்கின் ” மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவர் மிகவும் நல்ல மனிதர். படப்பிடிப்பு சமயத்திலே எனக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள் சார் உங்களுடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நான் நடிக்கவேண்டும் என என்னிடம் வாய்ப்புக்கேட்டார்.

Mysskin in recent interview

Mysskin in recent interview [Image Source : Twitter /@CinemaWithAB]

எனவே, அவர் கூறியதற்காகவே ஒரு கதை தயார் செய்யப்போகிறேன். அவருக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, என்னுடைய படம் கொஞ்சம் கலந்து அவருடைய ரசனைக்கும் அவருடைய ரசிர்கர்களின் ரசனைகேற்பையும் ஒரு படத்தின் கதையை தயார் செய்ய இருக்கிறேன். அதனை தயார் செய்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் கூறுவேன்” என கூறியுள்ளார்.

Mysskin about sk movie

Mysskin about sk movie [Image Source : File Image ]

இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் ஐயோ தலைவரே வேண்டவே வேண்டாம் அவருடைய படங்கள் ரொம்ப சீரிஸாக இருக்கும், அதில் நீங்க நடித்தால் செட் ஆகாது” என கூறி வருகிறார்கள். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top