News
மீண்டும் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் சிவகார்த்திகேயன்! என்ன பாஸ் இப்படி பண்றீங்க?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா கோப்பிகர், கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்திருந்தார்.

Ayalaan MOVIE [Image Source : File Image ]
ஏலியன் நமது உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதனை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த திரைப்படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து சிஜி வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் சிஜி வேலைகள் அதிகமாக இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி தள்ளி சென்று கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டே இந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாகவும், படம் இனிமேல் வெளிவராது எனவும் பேச்சுக்கள் வந்தது. பிறகு சிவகார்த்திகேயன் இறங்கி பணத்தை செலவு செய்து படத்திற்கான சிஜி வேலைகளை தொடங்கக்கூறினார். இதனையடுத்து ஒரு வழியாக படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் சிஜி காட்சிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
SK’s #Ayalaan is out of Diwali release, due to CG Work Delay. pic.twitter.com/Q5z7kPNgZT
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 6, 2023
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. படம் வெளியாகி பல நாட்களை கடந்து இன்னும் சில திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
