Connect with us

Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Sivakarthikeyan

Celebrities

ஆபாசக்காட்சி எடுத்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.! சீறி பாய்ந்தது போக்ஸோ வழக்கு.!

தமிழில் தல அஜித்தின் ஆரம்பம் மற்றும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்தவர் தான் ஹிந்தியில் இயக்குனராக வலம் வரும் மகேஷ் மஞ்ச்ரேகர். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்பொழுதம் மராத்தி மொழியில் நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா எனும் படத்தை இயக்கியுள்ளார். அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அப்பொழுதே அந்த படத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பற்றி அவதூராகவும், ஆபாசமாகவும் சில காட்சிகள் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையமும் பெண்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்களேன் …பிடிக்காத படத்தில் பிடித்து நடிக்கும் கேப்டன்.! ரெண்டு நாள் போதுமா?

இதனையடுத்து இந்த டிரைலர் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சர்ச்சையான காட்சிகளை இயக்கிய இயக்குனர் மகேஷ்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது மகேஷ் மீது மும்பை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், படத்தின் தயாரிப்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top