News
அயலான் படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்.! புது படத்தின் சுவாரசிய தகவல்.!
பிரின்ஸ் படத்தின் தோல்வியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan’s MaaveeranSINGLE [Image Source: Twitter]
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் அந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் மீண்டும் அயலான் படத்தை இயக்கி வரும் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

SK AND RK [Image Source: Google]
ஏற்கனவே, இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
