Gossips
‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு இத்தனை கோடியா? இயக்குனர் யார் தெரியுமா.?
நடிகர் விஜய் தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க, படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
கடந்த சில படங்களில் அவர் 100 கோடி ரூபாய் மற்றும் 125 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த விஜய்யின் அடுத்த ‘தளபதி 68’ படத்திற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பார் என்பது உண்மைதான்.
அதாவது, சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனையில் இருந்து விஜய்யின் சம்பளம் வசூலிக்கப்படுகிறது என்பதால் இந்த தொகை படக்குழுவுக்கு ஒன்றும் பெரிதில்லை என்று வர்த்தக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அட ஆமாங்க…. இந்த படத்திற்காக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், வெங்கட் பிரபு படத்தை இயக்குவார் என்றும், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் என இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக, தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் இயக்குனர் அட்லீக்கு கொடுத்ததாக கிசுகிசுக்கப்பட்டது. எது என்னவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு உண்மை என்னெவென்று தெரிய வரும்.
