தமிழில் மட்டுமல்ல…இந்த வருடம் சைலன்ட் சம்பவம் செய்த டாப் 5 சின்ன பட்ஜெட் படங்கள்…!
சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் படங்களை கொடுப்பதே ஆரோக்கியமான சினிமா என்று கூறலாம். ஒரு படம் மிகப்பெரிய வெற்றியடை பெரிய ஹீரோ இருந்தால் மட்டுமே தான் நடக்கும் என்பதை மாற்றி நல்ல கதை இருந்தால் போதும் வெற்றிகொடுக்கலாம் என்று இந்த ஆண்டு சில இயக்குனர்கள் நிரூபித்துள்ளார்கள்.
மேலும், இந்த ஆண்டு சில இயக்குனர்கள் சிறிய பட்ஜெட் வைத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்துள்ளனர். அப்படி இந்த வருடம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்த டாப் 5 படத்தை பற்றியை விரிவான விவரத்தை பார்க்கலாம்.
1.லவ் டுடே

LoveToday [Image Source: Google]
ஒரு நல்ல கதையுள்ள படத்திற்கு பெரிய ஹீரோ தேவையில்லை என்பதற்கு லவ்டுடே படத்தின் வெற்றி ஒரு முன் உதாரணமாக இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நடித்துள்ள இந்த படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்னும் படம் வெளியாகி பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.
இதையும் படியுங்களேன்- அண்ணாச்சி என்ட்ரி செதறு செதறு.. OTT-யில் வெளியாகும் ‘தி லெஜண்ட்’.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை 70 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக மாறியுள்ளது. ஒரு அறிமுக ஹீரோவின் படம் இந்த அளவிற்கு வசூலை குவித்தது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2.Masooda

Masooda [Image Source: Google]
இயக்குனர் சாய் கிரண் இயக்கத்தில் சங்கீதா கிரிஷ், திருவீர் ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தெலுங்கு திரைப்படம் Masooda. இந்த திரைப்படமும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாக பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இன்னும் இந்த திரைப்படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.
3.காலோடு

Galodu [Image Source: Google]
பி ராஜசேகர் ரெட்டி இயக்கத்தில் சுடிகாலி சுதீர், கெஹ்னா சிப்பி ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் ‘காலோடு’. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் கூட படத்தினுடைய பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்து இந்த வருடத்தின் வெற்றிப்படமாக மாறியுள்ளது.
4.ஜெயஜெயஜெயஜெயஹே

Jaya Jaya Jaya Jaya hey [Image Source: Google]
இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் பசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘ஜெயஜெயஜெயஜெயஹே’. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.
5.ஊஞ்சாய்

Uunchai [Image Source: Google]
சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், பரினிதி சோப்ரா ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி வெளியான ஹிந்தி திரைப்படம் ‘ஊஞ்சாய்’ ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று பெரிய ஹிட் படமாக மாறியுள்ளது.
