ஒரே ஒரு ஹிட்.! ஓகோன்னு வாழ்க்கை.! எகிறிய நடிகை இவானாவின் சம்பளம்….
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை இவானா. அட ஆமாங்க…. அந்த அளவிற்கு லவ் டுடே படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எங்கே, திரும்பி பார்த்தாலும் தற்போது இவானா தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
லவ் டுடே திரைப்படத்தில் நிகிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவருக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் டுடே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை இவானாவின் மார்க்கெட் தற்போது உச்சத்திற்கு சென்றுவிட்டது. அந்த வகையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் படங்களில் நடித்து வரும் இவானா, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்களேன் – இதுதான் வாரிசு ‘ஆன்மா’.! ஹெவி எமோசனை உண்டாக்கும் அம்மா பாடல் இதோ…
அட ஆமாங்க… ஒரு குறிப்பிட்ட 4 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க மட்டும் அவருக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாம். விளம்பர நிறுவனங்களும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக இருப்பதும் என்பது குறிப்பிடத்தக்கது.
