News
மகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா.! எகிறும் எதிர்பார்ப்பு…
பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அட ஆமாங்க… நடிங்கர் வேற யாருமல்ல நம்ம பாரதிராஜா தான், மகன் இயக்கத்தில் அப்பா நடிக்க போகிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க, சில புதுமுகங்கள் நடிக்க உள்ளனராம்.
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது. தனது முதல் இயக்கத்தில் தனது தந்தையை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்களேன் – மீண்டும் ‘அந்த மாதிரி’ காட்சிகளில் நடிக்கும் நயன்தாரா..? வெளியான அதிர்ச்சி தகவல்.!
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் திரையுலகைச் சேர்ந்த பத்து முன்னணி இயக்குனர்கள் இணைந்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
