Movies
தெறிக்கவிடும் விமர்சனங்கள்…குவியும் வசூல்.! ‘விடுதலை’ படத்தின் தற்போதய நிலவரம் இதோ.!
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

viduthalai part [Image Source: Google]
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். படம் வெளியாகி 3 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் படம் தற்போது வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Viduthalai Official Release Date [Image Source: Twitter]
மேலும், விடுதலை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
