17 C
London
Monday, July 15, 2024

வாலிபால் அணியாக மாறிய இந்திய கிரிக்கெட் அணி!! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணி கடற்கரையில் வாலிபால் விளையாடி வருகின்றனர்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிசிசிஐ: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வருகிறது. இதில், தற்போது லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 8 சுற்று தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய அணி தற்போது அதற்கான பயிரிச்சியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அணி பார்படாஸ் கடற்கரையில் வாலிபால் விளையாடும் வீடியோ ஒன்றை பிசிசிஐ X தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷதீப் சிங், சிவம் துபே என அனைவரும் வாலிபால் விளையாடி வருகின்றனர்.

இந்த வீடியோவானது ரசிகர்களிடேயே தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றியை பெற்று, ஒரு போட்டியானது மழையால் தடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here