சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இந்த ஆண்டு மறைந்த நட்சத்திரங்கள்….
தென்னிந்திய சினிமாவில் இந்த ஆண்டு சில முக்கியமான நட்சத்திரங்களையும் ஜாம்பவான்களையும் இழந்துள்ளது. அவர்களின் உயிரிழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றே சொல்ல வேண்டும், அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பு இன்று வரை பேசக்கூடியதாக அமைந்திருக்கிறது. இந்நிலையில், 2022 ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால், யாரெல்லாம் மறைந்தார்கள் என்று சிறிய பார்வை பார்க்கலாம் வருங்கள்.
பிரதாப் போத்தன்
ஜீவா, வெற்றி விழா, லக்கிமேன், மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் இந்த ஆண்டு ஜூலை 15 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69, இவர் கடந்த 1980 களில் இருந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என அணைத்து துறையிலும் முத்திரை பதித்தவர்.
பம்பா பாக்யா
தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடிய கோலிவுட் பின்னணி பாடகர் பாம்பா பாக்யா செப்டம்பர் 2 காலமானார். அவருக்கு வயது 49. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார். மேலும் இரவின் நிழல், மற்றும் பல படங்களில் பணியாற்றிய கோலிவுட் பின்னணி பாடகர் பாம்பா பாக்யா, திரைப்படப் பாடல்களைப் பாடுவதற்கு முன்பு பல பக்திப் பாடல்களைப் பாடி பிரபலமானவர்.
இதையும் படிங்களேன் – பஞ்சதந்திரம் பட நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்.!
எஸ் வி ரமணன்
வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் முன்னோடியும், திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.வி. ரமணன் செப்டம்பர் 26 அன்று காலமானார். ஆரம்பகால தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான பழம்பெரும் கே.சுப்ரமணியத்தின் மகன் தான் ரமணன். இவர், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் தாத்தாவும் கூட.
விக்ரம் கோகலே
பழம்பெரும் பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலே கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நவம்பர் 26ஆம் தேதி காலமானார். இவர், கோலிவுட்டில் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ மற்றும் ‘ஹே ராம்’ படங்களில் நடித்திருக்கிறார்.
சலீம் கவுஸ்
சில பாலிவுட் திரைப்படங்கள் தவிர பல தமிழ் படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ், ஏப்ரல் 28 அன்று தனது 70-வது வயதில் காலமானார். இவர், கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ படத்தில் ஜிந்தா கேரக்டரில் நடித்தார். இது போக, வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார்.
ஹரி வைரவன்
சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஹரி வைரவன், டிசம்பர் 3 அன்று காலமானார். இந்த இளம் நடிகர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தார்.
சிவநாராயண மூர்த்தி
நடிகர் சிவநாராயண மூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 8 அன்று தனது 68 வயதில் காலமானார். நடிகர் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் நகைச்சுவை வேடங்களில் நடித்து நீங்கா இடம்பிடித்தவர்.
