Connect with us

Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Aditi Shankar

Collection

அட்டகாசமான போஸ்…. விருமன் நாயகியின் அசத்தலான புகைப்படங்கள்..!

அட்டகாசமான போஸ்…. விருமன் நாயகியின் அசத்தலான புகைப்படங்கள்..!

ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன்படி, முதல் படமே கார்த்தியுடன் விருமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க இதில் அட்டகாசமாக நடித்துள்ளார் என தெரிகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

இந்த படத்தில் நடித்து நடிகையாக மட்டும் அறிமுகமாகாமல், இசையமைப்பாளர் யுவன் இசையில் ஒரு பாடலை பாடி, தமிழ் சினிமாவில் பாடகியாவும் அறிமுகமாகிவிட்டார். இவர் பாடிய விருமன் படத்தில் இருந்து வெளியான மதுரை வீரன் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவரது குரல் மற்றும், இவர் துறு துறுவென இருப்பதால் பல தமிழ் ரசிகர்களுக்கு அதிதி ஷங்கரை பிடித்துவிட்டது. விருமன் படத்தில் எப்படி நடித்துள்ளார் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில் முன்னணி நடிகைகள் போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், அதிதி சங்கரும் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- திருட்டு கதை சர்ச்சை… “விருமன்” திரைப்படம் வெளியாவதில் சிக்கல்…?

அதன்படி பச்சை நிற உடையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்தி அதற்கான சில அட்டகாசமான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விருமன் படத்தை தொடர்ந்து நடிகை அதிதி சங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top