Connect with us

News

தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார், விரைவில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. இதனைதொடர்ந்து, அவர் அடுத்ததாக ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார்.

பின்னர் அவர் டிஜே ஞானவேல் உடன் தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். அதற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது, லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தலைவர் 171’ என்று ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விக்ரம் பட ரிலீஸுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த திட்டம் தொடங்கவில்லை, பின்னர் இயக்குனர் லோகேஷ் விஜய்யுடன் மீண்டும் இணைவதாக அறிவித்தார்.

எனவே, லோகேஷ் கனகராஜை மீண்டும் சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைகள் சரியாக நடந்தால், ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top