Videos
தலையில் அடி, உடலில் காயம்.! சூரியின் ‘விடுதலை’ மேக்கிங் வீடியோ…
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘விடுதலை பாகம் 1’வரும் மார்ச் 31-ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
தற்போது, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் படப்பிடிப்பு மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், நடிகர் சூரி துணிச்சலாக செய்யும் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தலையில் அடி, உடலில் காயம் என சூரியின் அர்ப்பணிப்பு பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது, ரசிகர்கள் பலரும் இதற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்களேன் – இன்று இரவு 8:01-க்கு வெளியாகிறது “ஒசரட்டும் பத்து தல” பாடல்.!
இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர், இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவானதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
