Connect with us

News

ஹாட் அப்டேட்…! சூர்யா 42 படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியாகும் ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி படக்குழு அறிவிப்பு.

சூர்யா 42 திரைப்படம் சூர்யா திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய பட்ஜெட் படமாகும், இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இதில் சூர்யா ஐந்து அவதாரங்களில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படம் 2டி மற்றும் 3டியில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் UV கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி, ஏப்ரல் 16ம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியிடப்படும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிதுள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸில் லியோ படத்தையே முந்தியது, படத்தின் டைட்டில் கூட வெளியாகவில்லை, அதற்குள் சுமார் 500 கோடி ரூபாய்க்கு வியாபரம் ஆகியுள்ளதாம்.

Continue Reading
To Top