Gossips
ப்ரீ பிசினஸில் கோடிகளை அள்ளிய சூர்யா 42.! முழு லிஸ்ட் இதோ….
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தனது புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் 3டியில் படமாக்கப்பட்டு 10 மொழிகள், வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மிக பிரம்மாண்டமாக ‘சூர்யா 42’ படம் எடுக்கப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ‘சூர்யா 42’ திரைப்படம் திரையங்குகளில் வெளியாவதற்கு முன்னர், சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகியுள்ளதாம்.
தற்பொழுது, 500 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ள ‘சூர்யா 42’ படம், எதற்கெல்லாம் விலை போகி உள்ளது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. திரையரங்கு உரிமைகளில், தமிழகத்தில் – 60 கோடி, தெலுங்கு மாநிலம் – 30 கோடி, கேரளா – 15 கோடி, கர்நாடகா – 15 கோடி, ஓவர்சீஸ் – 50 கோடி, சாட்டிலைட் – 40 கோடி, ஆடியோ – 20 கோடி என மொத்தம் ரூ.500 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம்.
வெறும், 60 சதவீத படப்பிடிப்பு மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ள நிழலில், இதன் சாதனை விற்பனை விலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் வியாபாரத்தை முறியடித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்களேன் – இது என்னமா டிரஸ்.! கவர்ச்சியை தாராளமாக காமிக்கும் மாளவிகா மோகனன்…
