News
95-வது ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த சூர்யா.! மாறாக்கு கிடைத்த பெருமிதம்..
கடந்த ஆண்டு 95 வது ஆஸ்கார் விருதுகளின் நடுவர் குழுவில் சேர அழைக்கப்பட்ட தமிழ் சினிமா நடிகருக்கான பெருமையை சூர்யா பெற்றார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ மற்றும் டி.ஜே ஞானவேலு இயக்கிய ‘ஜெய் பீம்’ ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு அவருக்கு இந்த மரியாதை கிடைத்தது.
95-வது ஆஸ்கார் விருதுக்கு வாக்களிக்கும் பணியை முடித்துவிட்டதாக சூர்யா இன்று மதியம் உறுதிசெய்து, அதன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில்
மார்ச் 12, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
Voting done! #Oscars95 @TheAcademy pic.twitter.com/Aob1ldYD2p
— Suriya Sivakumar (@Suriya_offl) March 8, 2023
இதையும் படிங்களேன் – ஹோலி ஸ்பெஷல்: கொள்ளை கொள்ளும் அழகில் ஷெரின்..! வைரலாகும் வீடியோ…!
nadikrசூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்க, டிஎஸ்பி இசையமைக்கிறார். அவர் அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
