Connect with us
Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Tamil Sad Songs

Videos

இசையால் மனதை உருக வைத்த இசையமைப்பாளர்களின் டாப் லிஸ்ட்… இது வேற மாதிரியான பிளே லிஸ்ட்…

இசையால் மனதை உருக வைத்த இசையமைப்பாளர்களின் டாப் லிஸ்ட்… இது வேற மாதிரியான பிளே லிஸ்ட்…

பலருக்கும் காதல் தோல்விகள் அல்லது மன வருத்தம் ஏற்பட்டால் சோகமான பாடல்களை கேட்பார்கள். தமிழில் இருக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் ரசிகர்களுக்கு பிடித்த வாறு எதாவது ஒரு சோக பாடலை சிறந்ததாக இருக்கும். அப்படி இதுவரை தமிழில் உள்ள இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களை பற்றி பார்க்கலாம்.

1. இளையாராஜா – கண்ணே கலைமானே 

Ilayaraja

Ilayaraja [Image Source: Google ]

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் வரும் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். குறிப்பாக அந்த காலத்தில் இருந்து இந்த காலத்து வரை அனைவரும் சோகமாக இருத்தல் கேட்கும் சோக பாடல் கண்ணே கலைமானே. யேசுதாஸ் பாடிய இந்த பாடலை கேட்டு கண்ணீர் விடாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம்.  இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

2.எ.ஆர்.ரஹ்மான் – பூங்காற்றிலே 

AR Rahman

AR Rahman [Image Source: Google]

ஷாருக்கான் நடிப்பில் வெளியான “உயிரே” படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்  பூங்காற்றிலே பாடல் இன்று வரை ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட் லிஸ்டில் இருக்கிறது. பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளையும் வைரமுத்து அழகாக எழுதி இருப்பார். இந்த பாடலை உன்னி மேனன், ஸ்வர்ணலதாஆகியோர் பாடி இருந்தார்கள்.

3.யுவன் சங்கர் ராஜா – போகாதே 

Yuvan Shankar Raja Smile

Yuvan Shankar Raja Smile [Image Source: Twitter]

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி படத்தில் இடம்பெற்ற போகாதே..போகாதே பாடல் அந்த காலத்து இளைஞர்களிலிருந்து இந்த காலத்து இளைஞர்கள் வரை ஈர்த்துள்ளது. ஏதேனும் சோகம் என்றால் போதும் அனைவரும் உடனே கேட்கும் பாடல் இது தான். இந்த பாடலை நா.முத்து குமார் எழுதியிருந்தார். பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி இருந்தார்.

4.ஹாரிஸ் ஜெயராஜ்- எம்மா எம்மா

Harish Jeyaraj

Harish Jeyaraj [Image Source: Twitter]

சூர்யா நடிப்பில் வெளியான 7-ஆம் அறிவு படத்தில் இடம்பெற்றிருந்த “எம்மா எம்மா” பாடல் உருகாத நெஞ்சைகளையும் உருகவைத்த பாடல் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அந்த பாடலில் கொடுத்திருப்பார். இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடி இருந்தார்கள். பாடலை கபிலன் பாடி இருந்தார்.

5.ஜிவி பிரகாஷ் – இமையே இமையே

GV-Prakash

GV-Prakash [Image Source: Google]

ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் ஜிவியின் சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல்கள். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்த இமையே இமையே பாடலை அவரே பாடி இருந்தார். இந்த பாடலை பா.விஜய் எழுதியிருந்தார்.

6.அனிருத் – கனவே கனவே

Anirudh Ravichander

Anirudh Ravichander [Image Source: Google]

விக்ரம் நடிப்பில் வெளியான டேவிட் படத்தில் இடம்பெற்றிருந்த கனவே கனவே பாடல் 90ஸ் கிட்ஸ்களிலிருந்து 2k கிட்ஸ் வரை பலரது பேவரைட் பாடலாக உள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியிருந்தார். பாடலை மோகன்ராஜன் என்பவர் எழுதியிருந்தார்.

இதையும் படியுங்களேன்- சரக்கை ஊத்திக்கொடுத்து அதிர்ச்சி குண்டை தூக்கிப்போட்ட ரஜினி..மனமுடைந்த பழம்பெரும் நடிகர்.!

7.டி இமான் – போன உசுரு

D.IMAAN

D.IMAAN [Image Source: Google]

தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி படத்தில் இடம்பெற்றிருந்த போன உசுரு பாடல் இன்றுவரை பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது. இந்த பாடலை யுக பாரதி எழுதி இருந்தார். பாடலை ஹரிசரண், ஸ்ரேயா கோசல் ஆகியோர் பாடி இருந்தார்கள்.

8.சந்தோஷ் நாராயணன் – கண்ணம்மா

Santhosh Narayanan

Santhosh Narayanan [Image Source: Twitter]

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த கண்ணம்மா பாடல் இன்றுவரை பலரது பேவரைட் பாடலாக இருக்கிறது. மனதை உருகும் இசையுடன் கண்லங்க வைக்கும் வரிகளுடன் வரும் அந்த பாடலை பிரதீப் குமார், தீ ஆகியோர் இணைந்து பாடியிருந்தார்கள்.

9.சாம் சி.எஸ் -நீ போகாதே

Sam Cs

Sam Cs [Image Source: Twitter]

விஜய் சேதுபதி,மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நீ போகாதே பாடல் 2k கிட்ஸ்களுக்கு பிடித்த காதல் தோல்வி பாடல் என்றே கூறலாம். இந்த பாடலில் வரும் இசைகளும், வரிகளும் மனதை உருக வைக்கும் வகையில் இருக்கும். அந்த பாடலை சாம் சி எஸ் இசையமைத்தது மட்டுமில்லாமல் எழுதியும் இருந்தார். பாடலை பிரதீப் குமார், நேஹா வேணுகோபால் ஆகியோர் பாடியிருந்தார்கள்.

10.ஹிப் ஹாப் ஆதி – வாடி புள்ள வாடி

Hiphop Tamizha

Hiphop Tamizha [Image Source: Twitter]

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் அவரே இசையமைத்து நடித்து வெளியான முறுக்கு மீசை படத்தில் இடம்பெற்றிருந்த வாடி புள்ள வாடி பாடல் இளைஞர்களின் பேவரைட் பாடலாக இருக்கிறது. இந்த பாடலை அவரே எழுதி அவரே பாடியிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top