14.4 C
London
Friday, July 12, 2024

நீட் கருணை மதிப்பெண் ஒரு மோசடி-அமைச்சர் மா. சுப்பிரமணியன்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடந்து முடிந்த நீட் தேர்வில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த விவகாரம் பேசுபொருளாகி உள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நீட் தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவது சாத்தியமில்லாதது. சட்ட நுழைவுத் தேர்வு தொடர்பான தீர்ப்பை நீட் தேர்வுக்கு பொருத்துவது சரியல்ல. இது மாபெரும் மோசடி,” என்றார்.

நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தரவில்லை என்றும், அதற்கு தகுந்த ஆதாரம் காட்சிப்படுத்துமாறு கேட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது நீட் தேர்வு தமிழகத்தில் இல்லை, எடப்பாடி பழனிச்சாமி வந்த பிறகு தான் வந்தது. நீட் தேர்வில் குழப்பமும் குளறுபடியும் தொடர்ந்து வருகிறது. நேரப் பற்றாக்குறையால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்றார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here