17 C
London
Monday, July 15, 2024

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

தனியார் மருத்துவமனைக்கு நிகராக, அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தஞ்சாவூர் : தனியார் மருத்துவமனைக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பூதலூர் அருகே ஒரத்தூரில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் அவசர சிகிச்சை மையம் ஓராண்டுக்குள் அமைக்கப்படும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 45 கோடியில் புதிய மருத்துவச் சிகிச்சை கட்டிடம் 2025 டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

சென்னை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்ட செயற்கை கருத்தரிப்பு மையம் இனி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவமனைகளில் 984 மருந்தாளுநர் பணியிடங்கள் 15 நாட்களில் நியமிக்கப்படவுள்ளன.

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் 2.56 லட்சம் பேருக்கு ரூ. 221.11 கோடி செலவிடப்பட்டு, உயிர்கள் காப்பாற்றப்பட்டன,” என்றார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், கா.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here