14.4 C
London
Friday, July 12, 2024

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

முதலில் தென்னாப்பிரிக்காவில்கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸானது தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓமைக்ரான் பரவலை  கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவத் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img