17.9 C
London
Sunday, July 14, 2024

இன்று கலைஞர் நூலகத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மதுரையில் கலைஞர் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடத்தை முதல்வர் நேரடியாக சென்று பார்வையிட்டார். 2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டிடம் கட்டப்படுகிறது.

பின்னர், இந்த நுலக  கட்டுமானத்திற்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நுலகத்திற்கு ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்’ என்ற பெயரில் அமைய உள்ளது. பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த நூலகம் ஒரு வருடத்தில்  கட்டி முடிக்கப்பட உள்ளது.  இந்நிலையில், கலைஞர் நூலகம் கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

 

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img