16.9 C
London
Friday, July 12, 2024

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ப்ளே ஸ்டோரில் வரும் புதிய அப்டேட்.!

ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தால் அது தானாகவே லான்ச் ஆகும்படியான புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது கூகுள் ப்ளே ஸ்டோர்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கூகுள் ப்ளே ஸ்டோர் : ஸ்மார்ட்ஃபோன்களில் பல செயலிகள் உள்ளன, தொழில்நுட்ப வளர்ச்சியால் பல வேலைகளை செய்ய முடிகிறது. ஆஃப்ஸ்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். தற்போது, கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய மாற்றம் கொண்டு வரவுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் தானாகவே லான்ச் ஆகும் ‘App Auto Open’ வசதியை கூகுள் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம், செயலி முழுவதுமாக பதிவிறக்கம் ஆன பிறகு, அதை தனியாக லான்ச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்த புதிய அம்சம், பீட்டா வர்சனில் கிடைக்கிறது. ஆப் லான்ச் ஆனவுடன், நோட்டிஃபிகேஷன் அல்லது வைப்ரேஷன் மூலம் பயனர்களுக்கு தெரியப்படுத்தும் வசதியும் உள்ளது. கூகுள் பிளே ஸ்டார் v41.4.19-ன் APK டீர்டவுனைச் செய்த Android Authority அறிக்கையின்படி, இந்த புதிய அம்சம் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here