Movies
பட்ஜெட் பணத்தை அள்ள திணறும் ‘பத்து தல’.! தற்போதைய வசூல் விவரம் இதோ..!
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் 1200 திரையரங்குகளில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது என்றே கூறலாம்.

PathuThala [Image Source: Twitter]
இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.
படம் வெளியான 3 நாட்களில் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அதன்பிறகு 4, 5 -வது நாட்களில் வசூல் குறைய தொடங்கிவிட்டது என்றே கூறலாம். அதன்படி, படம் இதுவரை 30 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம்.

Pathu Thala [Image Source: Twitter]
40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இன்னும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை கூட எடுக்கமுடியாத நிலையில் உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 48-வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
