News
‘LGM’ படக்குழுவினரை மே தினத்தில் கெளரவித்த தல தோனி.!
கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து, தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் தங்கள் முதல் திரைப்படத்துக்கு “எல்ஜிஎம் – Lets Get Married” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தோனி என்டர்டெயின்மென்ட் குழு சென்னையில் உள்ள ‘எல்ஜிஎம்’ படக்குழு உறுப்பினர்களை கவுரவித்தது. துப்புரவுப் பெண்மணி முதல் செட் போடுபவர்கள் வரை கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் ரோஜா மலர்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோவை படக்குழு வெளியிட்டு தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
May Day wishes to one and all from team #LGM.
Here’s a special video to celebrate every crew member who put in their best efforts for our film. pic.twitter.com/EPuZrFtDc5
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) May 1, 2023
இதற்கிடையில், ஐபிஎல் 2023-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தோனி கிரிக்கெட் களத்தில் தொடர்ந்து தனது திறமைகளை நிருபித்து வருகிறார். 41 வயதிலும் சிக்ஸர்களும், ரன்களை குவித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
