Connect with us

News

இன்ஸ்டாகிராமில் நுழைந்த சில மணி நேரத்தில் சாதனை படைத்த தளபதி விஜய்.!

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், மேலும் அவரது ரசிகர்களின் ஆதிக்கம் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகின்றனர். தளபதி விஜய் ஏற்கனவே பேஸ்புக் 7.8 மில்லியன் பாலோவர்ஸ் மற்றும் ட்விட்டரில் 4.4 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

அவரது பதிவுகள் மிகவும் அரிதானவை இருந்தாலும், அது மிகவும் ட்ரெண்டிங்கில் இடம் பெறுவது வழக்கம். தற்போது, பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய். அதில், முதல் புகைப்படமாக ‘லியோ’ திரைப்படத்தின் காஷ்மீர் செட்யூலில் இருந்து இதுவரை யாரும் பார்க்காத புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில்,“ஹலோ நன்பாஸ் அண்ட் நன்பிஸ்” என்று தனது ரசிகர்களை செல்லமாக அழைக்கும் சொற்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர தொடங்கினர். இப்பொது, அவர்  4.5 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். மேலும், 4.7 மில்லியன் லைக்ஸ் மற்றும் 5 மில்லியனுக்கும் அதிகமான  கமெண்ட்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay (@actorvijay)

இதற்கிடையில், இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு, விஜய் சென்னையில் ‘லியோ’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அனிருத் இசையமைக்க, விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Continue Reading
To Top