Gossips
‘லால் சலாம்’ படத்தில் நடிக்கும் தம்பி ராமையா.?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்து வரும் ‘லால் சலாம்’ படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் தம்பி ராமையாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் தவிர நகைச்சுவை நடிகர் செந்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது தம்பி ராமையாவும் படத்தில் இணைந்துள்ளார். ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, விரைவில் வெளியாகும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது.
குறிப்பாக படத்தில் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடிக்கிறார். தற்போது, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ஷூட்டிங் ஷெட்யூலை முடித்த ரஜினிகாந்த், இரண்டு மாதங்களுக்கு ‘லால் சலாம்’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
