Connect with us
kiki and Shanthanu Bhagyaraj

News

மனைவியிடம் சாந்தனு மறைத்த அந்த விஷயம்.? செம கடுப்பான கிக்கி.!!

இயக்குனர் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு தொகுப்பாளினி கிக்கியை  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமானதுக்கு பிறகு  இருவரும் அடிக்கடி ஒன்றாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

Shanthanu AND kiki

Shanthanu AND kiki [Image Source : Instagram/@shanthnu]

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சாந்தனுவும் கிக்கி விஜயும் கலந்து கொண்டனர். அந்த பேட்டியில் அவர்கள் இருவரிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விகளுக்கு இருவருமே பதில் அளித்துள்ளார்கள். ஒரு சமயத்தில் சாந்தனு கேட்கும் கேள்விகளுக்கு கிக்கியும்  கிக்கி கேட்கும் கேள்விக்கு  சாந்தனுவும் பதில் அளிக்க அந்த பேட்டியை மிகவும் கலகலப்பாக போய்க்கொண்டிருந்தது.

Shanthanu AND kiki

Shanthanu AND kiki [Image Source : Instagram/@shanthnu]

அப்போது கிக்கி” நீ என்னிடமிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறாயா ..? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சாந்தனு “நான் எனக்கு பல கஷ்டங்கள் வரும்போது அதனை உன்கிட்ட சொல்லி கஷ்டப்படக்கூடாது என்று நான் நினைப்பேன். நான் எதாவது ஒரு விஷயத்தில் வருத்தப்பட்டிருப்பேன் அதை உன்கிட்ட சொல்லி உன்னை கஷ்டபடுத்தவேண்டாம் என நினைத்து இருக்கிறேன்.

Shanthanu AND kiki

Shanthanu AND kiki [Image Source : Instagram/@shanthnu]

அப்படி பல விஷயங்களை நான் மறைத்து இருக்கிறேன்.  அந்த விஷயங்கள் என்னவென்று நான் சொல்ல மாட்டேன்” என சாந்தனு கூற இதற்கு முதலில் கிக்கியின் முகம் கோபமடைந்து போல மாறியது. பிறகு கிக்கி சிரித்துக்கொண்டார். பிறகு சாந்தனு கிக்கியுடன் “நான் உன்னுடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால் நீ எதை எல்லாம் இழந்து இருப்பாய் .? என்று கேட்டார்.

Shanthanu family

Shanthanu family [Image Source : Instagram/@shanthnu]

இதையும் படியுங்களேன்- பொன்னியின் செல்வன் பட நடிகையா இது.? ஆத்தாடி எம்புட்டு கவர்ச்சி..வைரலாகும் புகைப்படங்கள்.!!

அதற்கு பதில் அளித்த கிக்கி “நீ என்னுடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால் எனக்குள்ள சுதந்திரம்நான் எழுந்திருப்பேன். என்னுடைய மாமியார் வீட்டில் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களும் எனக்கு சுதந்திரம்  கொடுக்கிறார்கள் .  நான் வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டிருந்தால் இந்த மாதிரி சுதந்திரம் கிடைத்திருக்குமா என்பதை தெரியவில்லை . நான் எது பண்ணாலும் எனக்கு அனைவருமே சப்போர்ட்டிவாக இருப்பார்கள்” என கூறியுள்ளார்.

Continue Reading
To Top