விடுதலை படத்தில் நடந்த திடீர் மாற்றம்.! வெற்றிமாறனின் பலே திட்டம்.?
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
படம் வெற்றி மாறன் படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தில் விஜய்சேதுபதி கைதியாகவும், சூரி போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்கள். முதலில் படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழு 10 நாட்கள் தான் கால்ஷீட் வாங்கியிருந்தார்களாம்.
அப்போது கைதியாக காட்டப்படும் விஜய் சேதுபதிக்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கிடையாதாம், ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ,வெற்றிமாறன் விஜய் சேதுபதிக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி வைக்க திட்டமிட்டுள்ளாராம் , இதனால் விஜய் சேதுபதியிடம் 50 நாட்கள் கால்ஷீட் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக சூரிக்கு மட்டும் அதிக காட்சிகள் இருக்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதிக்கு அதைபோல் அதிக காட்சிகள் இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. விரைவில் படத்தின் பாடல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
