News
மீண்டும் இணையும் ராஜா-ராணி ஜோடி! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தற்காலிகமாக ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். தற்போது, நடிகர் ஜெய் படத்தில் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இன்று நடிகர் ஜெய்யின் பிறந்தநாள் என்பதால் அதனை முன்னிட்டு படக்குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஜெய் இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு அட்லீயின் ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பும் செய்துள்ளார். ஆனால், படத்திற்கான இசையமைப்பாளரை இன்னும் இறுதி செய்யும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கடைசியாக கோஸ்டி படத்தில் கேமியோ ரோலில் காணப்பட்ட ஜெய், அருண்ராஜா காமராஜின் இதில் நடிக்கிறார்.
