Connect with us

News

‘பத்து தல’ செகண்ட் சிங்கிள் அறிவிப்பால் கடுப்பாகிய ரசிகர்கள்.!

ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகிறது. படத்திற்கான முதல் பாடல் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Pathu ThalaT easer [Image Source: Twitter]

தற்போது, இன்று மாலை ‘பத்து தல’ செகண்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, படக்குழுவும் சற்று நேரத்திற்கு முன்னர் அதன் அறிவிப்பையும் வெளிட்டது. அந்த  அறிவிப்பில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த பெயரும் அதன் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

Pathu Thala Second Single [Image Source: Google]

ஆனால், வெளியான அறிவிப்பில் செகண்ட் சிங்கிள் பாடல் இன்னும் தயாராகிக் கொண்டிருக்கிறது, என்றும் விரைவில் அது வெளியிட கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி சீக்கிரம் இதெல்லாம் ஒரு அப்டேட்டா? சீக்கிரம் இரண்டாவது பாடலை வெளியீடுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதையும் படிங்களேன்  – சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் முதல் பார்வை வீடியோ.!

சமீபத்தில் கூட படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. டீசரை வைத்து பார்க்கும்பொழுது இந்த படத்தில, சிம்பு ஒரு அண்டர்கிரவுண்ட் தாதாவாக நடித்திருக்கிறார். இயக்குனர் மற்றும் நடிகரான கெளதம் மேனன் அரசியல் வாதியாக நடித்துள்ளார், கவுதம் கார்த்திக் காவலராக நடித்துள்ளார் என்று சொல்லப்பட்டது, ஆனால், டீசரில் அவர் ஒரு ரவுடியாக நடித்திருப்பது போல் தெரிகிறது.

Pathu ThalaT easer 2

Pathu ThalaT easer [Image Source: Twitter]

மேலும், படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க மார்ச் இரண்டாம் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர்.

Pathu ThalaT easer [Image Source: Twitter]

Continue Reading
To Top