News
‘லியோ’ படத்தின் சென்னை ஷெட்யூல் நாளை தொடங்குகிறது.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 23 அன்று ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்து கொண்ட படக்குழு தற்போது ஒரு சிறிய இடைவெளியில் உள்ளது. ஆனால், படத்தின் அடுத்த ஷெட்யூல் நாளை மார்ச் 29-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு பிரபல திரைப்பட பிலிம் சிட்டியில் படமாக்க திட்டமிட்டு உள்ளனராம். மேலும், இந்த ஷெட்யூலில் படகுக்குழு அடுத்த சில வாரங்களுக்கு சென்னையில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட வேகமாக நடந்து வரும் நிலையில், மே மாதத்திற்குள் முழுப் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடக்கவுள்ளது. மேலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அங்கு தான் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்களேன் – ரஜினி மகள் வீட்டில் திருடியவர்களுக்கு 2 நாள் போலீஸ் காவல்.!
இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 19.10.2023 அன்று வெளியிடப்பட உள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
