Connect with us
Thani Oruvan

Movies

தனி ஒருவன் 2 அப்டேட் கேட்டவர்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன இயக்குனர்!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடித்திருப்பார்.  படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இன்றுவரை இருக்கிறது என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு ஆக்சன் காட்சிகளையும், மிரட்டலான பின்னணி இசையும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில், தனி ஒருவன்  2 படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதற்கான அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியானது. இன்னும் சில நாட்கள் மட்டுமே ஆகஸ்ட் 28-ஆம் தேதி வருவதற்கு இருக்கிறது.

இந்த நிலையில், தனி ஒருவன் படம் வெளியான அதே தேதியில் படத்தின் உடைய அடுத்த பாகத்திற்கான அப்டேட் வெளியாகும் என வீடியோவை வெளியீட்டு மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தெரிவித்துள்ளார்கள்.  இது குறித்து வீடியோவில் மோகன் ராஜா பேசியதாவது ” இத்தனை வருடங்கள் கடந்தும் தனி ஒருவன் படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் பெரியது. நானும் என்னுடைய தம்பி ஜெயம் ரவியும் மீண்டும் இணைக்கிறேன். அதாவது தனி ஒருவன் 2 படத்தின் மூலம் நாங்கள் இருவரும் இணைகிறோம்.

தனி ஒருவன் 2 படத்திற்கான அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகும் ” என கூறியுள்ளனர். இந்த அப்டேட்டை பார்த்த பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என கூறி வருகிறார்கள். மேலும் நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top