News
நடிகை சரண்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த அந்த இயக்குனர்.?
நடிகை சரண்யா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னணி ஹீரோயினாக வலம் வந்த காலத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சில நடிகர்கள் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் தற்போது சமீபகாலமாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு திறமையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

Saranya Ponvannan [Image Source : File Image ]
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை சரண்யாவுக்கு இரண்டு திருமணம் முடிந்ததாக பரபரப்பான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சரண்யா பொன்வண்ணன் என்று அழைக்கப்படும் அம்மா நடிகை இவர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார்.

Saranya Ponvannan [Image Source : File Image ]
சரண்யா தந்தை பிரபல தயாரிப்பாளர். மலையாளத்தில் பல படங்களை தயாரித்துள்ளார். ஆரம்பத்தில் நடிகை சரண்யா ராபர்ட் ராஜசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பிறகு நடிகை சரண்யா ராஜசேகர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று அவரிடம் இருந்து விலகிவிட்டார்.

Saranya Ponvannan[Image Source : File Image ]
பிறகு, பாரதிராஜா அவர்களுடைய ஏற்பாட்டில் நடிகர் பொன்வண்ணன் சரண்யா திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா..? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
