57 வயதில் 23 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.!
பிரபல நடிகர் பப்லு என்கிற பிருத்திவிராஜ் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இவரது, முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறாராம். 26 வயதான அவரது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ACTOR BABLOO PRITHIVIRAJ SON [Image Source: Google]
இந்நிலையில், மலேசியாவை சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண்ணை பப்லு திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது, சின்னத்திரை வட்டாரத்தில் இந்த இரண்டாம் திருமண விவகாரம்தான் பரபரப்புச் செய்தியாக இருந்து வருகிறது.
முதல் மனைவியுடன் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில், மலேசியாவை சேர்ந்த 23 வயது அந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், மலேசியாவில் இருக்கும் அந்த பெண்ணிற்கு தொழில் செய்ய பணம் கொடுத்து உதவி செய்துள்ளார் நடிகர் பப்லு. இப்பொழுது, திருமணமாகி பப்லுவின் மகனை கவனித்து வருவதாகவும் சில நம்பதக்க சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதையும் படிங்களேன் – 44 வயதிலும் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்து மிரள வைத்த நடிகை ஜோதிகா.! வீடியோ உள்ளே…

Babloo Prithiveeraj Second Marriage [Image Source: Google]
தற்போது சன் டிவியில் ‘கண்ணன கண்ணே’ தொடரில் நடித்து வருகிறார் பப்லு. இதற்கு முன், கோகுலத்தில் சீதை, அரசி, வாணி ராணி மற்றும் மர்ம தேசம் உள்ளிட்ட பிரபல சீரியலிலும் நடித்திருக்கிறார்.

Babloo Prithiveeraj [Image Source: Google]
ஆரம்ப கலகட்டத்தில் இந்த பழம்பெரும் நடிகர் பப்லு, SAC இயக்கத்தில் ரஜினிகாந்த்-பாக்யராஜ் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கலக்கி இருக்கிறார்.
