Connect with us

News

சோகம்…கணவர் இறந்த அதே மாதத்தில் பிரபல நடிகரின் மனைவி காலமானார்.!

இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கே.விஸ்வநாத், தனது வயது முதிர்வு காரணமாக பிப்ரவரி 2-ல் காலமானார். இவரது மறைவு சினிமா உலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், நேற்று மாலை 6:30 மணியளவில் ஹைதராபாத்தில் இவரது மனைவி ஜெயலட்சுமி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.

K. Viswanath’s wife died [Image Source: Twitter]

கணவர் உயிரிழந்து ஒரு மாதத்திலேயே மனைவி இறந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கே ஜெயலட்சுமிக்கு தெலுங்கு நடிகர்களான சந்திர மோகன் மற்றும் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

K. Viswanath’s wife died [Image Source: Twitter]

கே.விஸ்வநாத் தமிழில் யாரடி நீ மோகினி, ராஜபாட்டை ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒலிப்பதிவாளராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கி இயக்குனராக 53 படங்களை இயக்கி திரையுலகில் தவிர்க்க முடியாது இயக்குனராக திகழ்கிறார்.

இதையும் படிங்களேன் – வாரிசு மெகா ஹிட்….மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் தளபதி விஜய்.!

பத்ம ஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்த கே. விஸ்வநாத் குறிப்பாக, பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் என பல சமுக விஷயங்களை தனது திரைப்படங்கள் மூலமாக பேசி, ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.

Continue Reading
To Top