பூங்குழலி அழகை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! பொன்னியின் செல்வனின் வைரல் புகைப்படம்..
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன் என பலர் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் படக்குழு தீவிர விளம்பர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினம் ஒரு மாநிலம் சென்று பொன்னியின் செல்வனை பிரம்மாண்டமாக விளம்பர படுத்தி வருகிறார்கள்.
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் படி, பூங்குழலி கதாபாத்திரம் பல முக்கிய கதாபாத்திரங்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்களேன் – செல்வராகவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.!
அந்த வகையில், அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவிக்கு அத்தையாக வரும்பூங்குழலி, வல்லவரையன் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்திக்கு தோழியாக நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் அலைகடல் பாடலில் கார்த்தியுடன் படகில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி இருப்பார்.
தற்போது, பூங்குழலியாக நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி பி படகில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் வெளியான அலைகடல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பூங்குழலியின் அழகை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்கள்….
